Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Jeremy Thorpe விவகாரம்: குற்றவாளி குறித்து புதுத் தகவல்!

In
Updated: 10:10 GMT, Jun 3, 2018 | Published: 10:10 GMT, Jun 3, 2018 |
0 Comments
1121
This post was written by : Varshini

லிபரல் கட்சியின் முன்னாள் தலைவரான Jeremy Thorpe தொடர்புடைய வழக்கின் குற்றவாளி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது உயிருடன் உள்ளாரென Gwent பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு நிறைவடைந்த வழக்கு விசாரணைகள் மீளவும் தூசுதட்டப்பட்டுள்ளன.

ஓரினச் சேர்க்கையாளர் எனக் கருதப்படும் Jeremy Thorpe,  ஸ்கொட் என்பவருடன் வாழ்ந்துவந்தார். இந்நிலையில், ஸ்கொட்டை அவரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக அன்ரூ நிவ்டன் என்பவருக்கு Jeremy Thorpe பணம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில், கொலைகாரரின் துப்பாக்கி கீழே விழுந்த காரணத்தால் ஸ்கொட் உயிர்த்தப்பினார். இச்சம்பவம் Jeremy Thorpeஇன் வாழ்க்கையை புரட்டிப்போட்டதோடு, 20 வருடகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்து வந்த தனது தொகுதியான North Devonஇல் உறுப்புரிமையையும் இழந்தார். லிபரல் கட்சியின் தலைமைப் பதவியையும் துறந்த அவர் கடந்த 2014ஆம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு 2017ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், ஸ்கொட்டை கொலைசெய்ய அமர்த்தப்பட்டவர் உயிருடன் உள்ளார் என்றும், அவர் வெவ்வேறான பெயர்களில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20ஆம் நூற்றாண்டின் பிரித்தானிய அரசியலில் சகலரது கவனத்தையும் ஈர்த்திருந்த Jeremy Thorpe ஸ்கொட் விவகாரத்தில் தனது செல்வாக்கை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg