Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

In இலங்கை
Updated: 08:25 GMT, Jun 14, 2018 | Published: 08:25 GMT, Jun 14, 2018 |
0 Comments
1046
This post was written by : Yuganthini

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று செங்கலடியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

‘நாம் எமது பிள்ளைகளின் சுற்றுச் சூழலை மதுபானம் மற்றும் சிகரெட் புகையிலிருந்து விடுவிப்போம்’ எனும் கருப் பொருளின் கீழ் குறித்த விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, செங்கலடி வாழ்வின் எழுச்சி சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

செங்கலடி சமூர்த்தி அலுவக முன்றலில் ஆரம்பமாகி குறித்த பேரணி செங்கலடி பிரதான வீதியினூடாக பதுளை வீதி சந்திவரை சென்று பின்பு பிரதேச செயலகத்தை வந்தடைந்து

இதன்போது விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்  புகைத்தலின் அபாயத்தினை ஒழித்து வறுமை நிலையினைக் குறைத்து அபிவிருத்தியினை மேம்படுத்துவோம், புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு புகைத்தலற்ற, மதுபானமற்ற வளமான புதியதோர் சமுதாயத்தை உருவாக்குவோம், சிகரெட் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை நமது நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம், புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம், ஒழுக்க நெறி நிறைந்த சுபீட்சமான கிராமத்தை கட்டி எழுப்புவோம் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)