Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஞானசாரர் விவகாரம்: ஜனாதிபதியுடன் இன்று முக்கிய சந்திப்பு

In இலங்கை
Updated: 05:41 GMT, Jun 20, 2018 | Published: 03:33 GMT, Jun 20, 2018 |
0 Comments
1083
This post was written by : Risha

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரம் தொடர்பாக, பௌத்த சமய விவகார அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஞானசாரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) குறித்த முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அவரது காவியுடை நீக்கப்பட்டு சாதாரண சிறைக்கைதிகளின் உடை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பௌத்த பிக்குகள், அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஞானசாரரின் காவியுடை நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறிவரும் அதேவேளை, ஞானசாரரின் காவியுடை நீக்கப்பட்டு அவருக்கு சிறைச்சாலை உடை வழங்கப்பட வேண்டுமென இன்னொரு தரப்பு கூறிவருகிறது.

இந்நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் இது குறித்து நேற்று கலந்துரையாடப்பட்டிருந்த நிலையில், இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசாரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg