Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 06:23 GMT, Jun 25, 2018 | Published: 06:22 GMT, Jun 25, 2018 |
0 Comments
1085
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரின் பிரதான அஞ்சலகத்திற்கு முனபாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடு தழுவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.‪

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg