Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவசர நிலை பிரகடனம்

In
Updated: 06:46 GMT, Dec 6, 2017 | Published: 06:46 GMT, Dec 6, 2017 |
0 Comments
1170
This post was written by : JudeDanish

கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அனர்த்தம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சலிருந்து சுமார் 115 கிலோமீற்றருக்கு அப்பால் 27000 மக்கள் தொகையினைக் கொண்ட வென்சூரா அண்டிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக சுமார் 2500 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காற்றுக்காரணமாக வேகமாக தீப் பரம்பல் ஏற்பட்டிருந்தது. இதனால் அனர்த்தம் அதிகமாகியிருந்தது. மேலும் தீ காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததுடன் 150 மேற்பட்ட கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

தீயினைக் கட்டுப்படுத்தும் பணியில் 500 தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதேவேளை கலிபோர்னிய ஆளுனர் ஜெரி பிரவுன், மாநிலத்தில் அவசர நிலையை அமுல்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg