#MeToo விவகாரம்: வைரமுத்து மீது வழக்கு – சின்மயி அதிரடி பேட்டி!
In ஆசிரியர் தெரிவு October 21, 2018 10:41 am GMT 0 Comments 1479 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

#MeToo விவகாரம் குறித்து பெண்கள் தந்திருந்த ஆதரவைப் போன்று ஆண்கள் தரவில்லை எனவும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களை கேள்வி கேட்கும் நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களை எத்தனை பேர் கேள்வி கேட்டுள்ளீர்கள்? என்று ஊடக சந்திப்பென்றில் மிகவும் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
#MeToo விவகாரம் குறித்து விசாரிக்கவும், நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். ஆனால் அந்த குழுவில் இருப்பவர்கள் யார்? அவர்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் தெரியாது என்று பாடகி சின்மயி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சின்மயிடம் தெடர்ந்தும் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தன்னுடைய திருமணத்திற்கு ஏன் வைரமுத்து அழைக்கப்பட்டார் என்ற கேள்விக்கு தான் பல முறை பதில் தெரிவித்துள்ளதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், தாயாரின் உடல்நிலைகாரணமாக சிலரை நேரில் சென்று அழைக்கமுடியாத காரணத்தால் பி.ஆர்.ஓ மூலமே பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டதாகவும் அந்த அழைப்பின் மூலமாக வந்தவர்களில் ஒருவர் தான் வைரமுத்து என்றும் சின்மயி கூறியுள்ளார்.
மேலும், வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது பற்றி உங்களால் ஊகிக்க முடியாது என்றும், அவரால் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்ற பெண்களுக்குத்தான் தெரியும் என்றும் ஊடக சந்திப்பின் போது பாடகி சின்மயி தெரிவித்த கருத்துக்களால் பல சர்ச்சைகளும் எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.