டுபாயிலிருந்து வந்த முக்கிய புள்ளிகள் கட்டுநாயக்கவில் கைது!
In ஆசிரியர் தெரிவு April 8, 2019 3:34 am GMT 0 Comments 2314 by : Jeyachandran Vithushan

டுபாயில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் கும்பலின் தலைவர்களுள் ஒருவருமான மாகந்துரே மதுஷின் சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொஹமட் நையீம், மொஹமட் முபா ஆகிய இருவரும் டுபாயிலிருந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடுகடத்தப்பட்டனர். யு.எல்.-226 என்ற விமானத்தின்மூலம் இவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி மாகந்துரே மதுஷ் உட்பட 31 பேர் டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா