புதிய அமைச்சரவை விபரம்
In ஆசிரியர் தெரிவு December 20, 2018 4:52 am GMT 0 Comments 2667 by : Dhackshala
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை விபரங்கள் வருமாறு-
♦ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி,தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
♦ மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம்
♦ ராஜித சேனாரத்ன – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்தியம்
♦ மனோ கணேசன் – தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்துவிவகாரம்
♦ ரவுப் ஹக்கீம் – உயர் கல்வி, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்
♦ ஜோன் அமரதுங்க – சுற்றுலாத்துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ விவகாரம்
♦ காமினி ஜயவிக்ரம பெரேரா – புத்த சாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி
♦ லக்ஷ்மன் கிரியெல்ல – பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி
♦ திலக் மாரப்பன – வெளிநாட்டு அலுவல்கள்
♦ஹரின் பெர்னாண்டோ – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை
♦ ரவி கருணாநாயக்க – மின்சக்தி மற்றும் எரிசக்தி
♦ வஜிர அபேவர்தன – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்
♦ தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
♦ அகிலவிராஜ் காரியவசம் – கல்வி
♦ சஜித் பிரேமதாஸ – வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
♦ ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு
♦ பாட்டலி சம்பிக்க ரணவக்க – பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி
♦ நவீன் திசாநாயக்க – பெருந்தோட்ட தொழிற்துறை
♦ தயா கமகே – தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல்
♦ மலிக் சமரவிக்ரம – அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழிநுட்பம்
♦ பி.ஹரிசன் – விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர்
♦ கபீர் ஹாசிம் – பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
♦ ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவம்
♦ கயந்த கருணாதிலக – காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு
♦ அர்ஜுன ரணதுங்க – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
♦ பழனி திகாம்பரம் – மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி
♦ சந்திரானி பண்டார – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
♦ அப்துல் ஹலீம் – தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார
♦ சாகல ரத்னாயக்க – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி
விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசம்!
புதிய அரசாங்கத்தின் விளையாட்டு தொலைத்தொடர்பு டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுப் பொறுப்பு ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஆரம்பம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
அது தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அமைச்சரவை விபரங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்கு ஜனாதிபதி வருகை
புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்விற்கு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவை பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு உறுப்பினர்கள் வருகைதந்துள்ளனர்.
தற்போது பதவிப்பிரமாண நிகழ்விற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை (3ஆம் இணைப்பு)
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதரவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை பதவிப்பிரமாணத்திற்கு ஐ.தே.க. உறுப்பினர்கள் வருகை (2ஆம் இணைப்பு)
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்விற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறிப்பாக இன்றைய தினம் 30 அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்!
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மேலும், புதிய அமைச்சரவை 30 பேருக்குள் மட்டுப்படுத்தப்படவுள்ளதோடு, அதில் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களே இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. ஏனைய அமைச்சர்கள் எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்களென கூறப்படுகிறது.
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர், அமைச்சரவை கூடவுள்ளதோடு அதில் இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.