Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செலான் வங்கியின் மூன்றாம் காலாண்டு வளர்ச்சி: ரூபா 4,062 மில்லியன்

In வணிகம்
Updated: 13:33 GMT, Nov 11, 2015 | Published: 12:33 GMT, Nov 11, 2015 |
0 Comments
1289
This post was written by :

செலான் வங்கியானது 2015 செப்டெம்பர் 30ஆம் திகதி முடிவடைந்த 9 மாத காலப்பகுதியில் வருமான வரியற்ற இலாபமாக ரூபா 4,062 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் மனம் கவரத்தக்க ஒரு செயற்பாட்டை பதிவு செய்திருக்கின்றது.

இதனுடன் தொடர்புபட்ட கடந்த வருடத்தின் 9 மாத காலப்பகுதியில் பெறப்பட்ட வரிக்குப் பின்னரான இலாபமான ரூபா 2,253 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 21 சதவீகித அதிகரிப்பாகும்.

2015 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று முடிவடைந்த 9 மாதங்களுக்கான தேறிய வட்டி வருமானம், ரூபா 8.22 பில்லியனில் இருந்து ரூபா 8.85 பில்லியனாக 8%  இனால் அதிகரித்தது. தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம், ரூபா 1,648 மில்லியனில் இருந்து ரூபா 1,869 மில்லியனாக 13% இனால் அதிகரித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக செலான் வங்கி அடையப் பெற்ற திடமான வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சியான தன்மையை வெளிப்படுத்துவதாக இது காணப்படுகின்றது.

வாடிக்கையாளர்களின் சேவை அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 2015 இன் 3ஆம் காலாண்டு காலப்பகுதியில் கிளை இடம் மாற்றம் மற்றும் புதுப்பொலிவூட்டல் செயற்றிட்டமும் முழு முயற்சியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.

வங்கியானது 2 புதிய கிளைகளை திறந்திருப்பதுடன், மேலும் 12 கிளைகளை முற்றுமுழுதாக புதுப்பொலிவூட்டி இருக்கின்றது. அத்துடன் அதற்கு மேலதிகமாக 2 கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நட்புறவான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளன. 2010 தொடக்கம், 2015 செப்டெம்பர் மாத இறுதி வரைக்கும் வங்கியின் 85% இற்கும் அதிகமான கிளை வலையமைப்பு புதுப்பொலிவூட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg