Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வளைகுடா கூட்டமைப்பு நாடுகளுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு

In வணிகம்
Updated: 10:33 GMT, Mar 25, 2016 | Published: 10:33 GMT, Mar 25, 2016 |
0 Comments
1227
This post was written by :

வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் நாடுகளான சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு ராட்சியம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிப்பதே இந்தப் புதிய கட்டணக் குறைப்பின் நோக்கம் என்று அக்கவுன்சிலின் துணை செயலாளர் அப்துல்லா பின் ஜூமா அல் சிப்லி தெரிவித்துள்ளார்.

தொலைபேசி, குறுந்தகவல் மற்றும் இணையதள சேவைகளுக்கான கட்டணங்களை 3 ஆண்டுகளுக்குள் குறைக்க போவதாக வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் கடந்த வருடம் தெரிவித்திருந்தது. எனினும், இணையதள மற்றும் குறுந்தகவல் போன்றவற்றுக்கான கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg