Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

369 ஒட்ட வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 10:08 GMT, Nov 28, 2016 | Published: 10:08 GMT, Nov 28, 2016 |
0 Comments
1123
This post was written by : Anojkiyan

ஹமில்டனில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு 369 ஒட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நான்காவது நாளான இன்று (திங்கட்கிழமை), தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் ஒரு ஒட்டங்களை மட்டும் பெற்றிருந்தது. போட்டியின் இறுதிநாளான நாளை, 10 விக்கெட்டுகள் வசமிருக்க 368 ஒட்டங்களை பெறவேண்டி பாகிஸ்தான் களமிறங்கவுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 271 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஒட்டமாக ராவல் 55 ஒட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சில் சொய்ல் கான் 4 விக்கெட்டுகளையும், இம்ரான் கான் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதைதொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 216 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஒட்டமாக, பாபர் அசாம் 90 ஒட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்து வீச்சு சார்பில், சவுத்தீ 6 விக்கெட்டுகளையும், வாக்னர் 3 விக்கெட்டுளையும் சாய்த்தனர்.

55 ஒட்டங்கள் முன்னிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 313 ஒட்டங்களை பெற்றிருந்த நிலையில், பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

இதையடுத்து, இன்றைய தினம், தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆட்டநேர முடிவில் ஒரு ஒட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg