Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோஸ் மொரின்கோவிடம் விளக்கம் கோரும் சர்வதேச கால்பந்து சபை

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:56 GMT, Nov 29, 2016 | Published: 09:55 GMT, Nov 29, 2016 |
0 Comments
1223
This post was written by : Elakkiya

பிரித்தானியாவின் பிரபல கால்பந்து கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் மேலாளர் ஜோஸ் மொரின்கோ மைதானத்தில் தவறாக நடந்துக்கொண்டதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து சர்வதேச கால்பந்து சபை விளக்கம் கோரியுள்ளது.

ஓல் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் வெஸ்ட் ஹம் அணிகள் மோதிய போட்டி 1:1 என்ற ரீதியில் சமநிலையடைந்தது.

இப்போட்டியின் போது மன்செஸ்டர் யுனைடெட் அணி மேலாளர் ஜொஸ் மொரின்கோ, கோபத்தில் தண்ணீர் போத்தலை உதைத்ததாகவும் இதனால் போட்டியின் நடுவர் அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இத்தகைய தவறான நடத்தை குறித்து எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிக்குள் ஜொஸ் மொரின்கோ பதிலளிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சபை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற போட்டியின் போதும் ஜோஸ் மொரின்கோ தவறாக நடந்து கொண்டதற்காக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் ஒரு போட்டியில் தடையும் 8000 ஆயிரம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg