Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய் மண்ணை விட்டு வேறு மாநிலத்துக்காக விளையாடுவதா? : மாரியப்பன்

In கிாிக்கட்
Updated: 11:06 GMT, Nov 29, 2016 | Published: 11:06 GMT, Nov 29, 2016 |
0 Comments
1401
This post was written by : Elakkiya

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்கமகன் மாரியப்பன் தேசிய அளவிலான போட்டிகளில் கர்நாடாக மாநிலத்துக்காக கலந்து கொள்ளப் போவதாக வெளியாகிய தகவல்களை மறுத்துள்ளார்.

மாரியப்பன் அவருடைய பயிற்சியாளர் சத்திய நாராயாணாவின் அறிவுரையின் பெயரில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி பெங்களூரில் குடியேறவுள்ளதாகவும் எதிர்காலத்தில் தேசிய அளவிலான போட்டிகளில் கர்நாடாக மாநிலத்துக்காக கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாரியப்பன், ”யாராவது தாய் மண்ணை விட்டு வெளியேறி வேறு மாநிலத்துக்காக விளையாடுவார்களா?. எனக்கு ஊக்கமும் வாய்ப்பும் அளித்தது இந்த மண்தான்.

தற்போது விழாக்களில் பங்கேற்று வருவதால், என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த இடைவெளியில் தான் வதந்திகளை பரப்பியுள்ளனர்.’ என கூறியுள்ளார்.

மேலும், லண்டனில் நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனையுடன் தங்கம் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பெங்களூரில் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் அதனால் இப்படி ஒரு வதந்தி வெளியாகியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg