Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலெப்போ மோதல்: 16 ஆயிரம் பொதுமக்கள் வெளியேற்றம்- ஐ.நா. அறிவிப்பு

In உலகம்
Updated: 04:34 GMT, Nov 30, 2016 | Published: 04:33 GMT, Nov 30, 2016 |
0 Comments
1322
This post was written by : Risha

கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்குட்பட்ட சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 16 ஆயிரம் பொதுமக்கள் சிரிய அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள இடங்களை நோக்கி அந்நாட்டின் அரசு படைகள் முன்னேறிவரும் வேளையில், அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான நெருக்கடி நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ஓ பிரையன் குறிப்பிட்டுள்ளார்.

அலெப்போ நகரில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து விவாதிக்கும் வகையிலான ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு அலெப்போவில் அண்மைய வாரங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அண்மைய நாட்களாக அதிகரித்துவரும் தாக்குதல்களின் எதிரொலியாக அலெப்போவில் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதுடன், உணவு பற்றாக்குறை நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என ஐ.நா. அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg