Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பொறிமுறை

In இலங்கை
Updated: 05:47 GMT, Nov 30, 2016 | Published: 05:47 GMT, Nov 30, 2016 |
0 Comments
1211
This post was written by : Varshini

யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளது பாதுகாப்பு தொடர்பில் விசேட பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

”பெண்களுக்கு இன்று சுதந்திரமாக பொது போக்குவரத்தில் பயணிக்கமுடியவில்லை. பல்வேறு வன்முறைகளை சந்திக்கவேண்டிய அவலநிலை காணப்படுகிறது. இவ்வாறான சம்பவங்களிலிருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, விசேட திட்டங்களும் அவசியம்.

அத்தோடு, யுத்தத்தால் விதவைகளான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உரிய பாதுகாப்பு அவசியம். அதற்காக விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதேவேளை, இன்று எச்.ஐ.வி. தொற்றுநோய் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் சுமார் 15 ஆயிரம் வரையிலான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அரச சார்பற்ற அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. தற்போதைய அரசாங்கம் பல விடயங்களுக்கு வரிவிதித்துள்ளது. இதனால் வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் மேற்படி தொகை இரட்டிப்பாகும் நிலை ஏற்படும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg