Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு மேலும் சில வசதிகள்

In இந்தியா
Updated: 11:47 GMT, Feb 21, 2017 | Published: 05:43 GMT, Feb 21, 2017 |
0 Comments
1302
icon_com
This post was written by : Shailu
da-case-sc-to-decide-fate-of-sasikala-tomorrow

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பி2 பிரிவில் உள்ள சசிகலாவுக்கு சில மேலதிக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சசிகலாவுக்கு மின்விசிறி, தொலைகாட்சி, நாற்காலி, கட்டில், பத்திரிகைகள் முதலான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, சிறையில் தனி அறையும் வழங்கப்பட்டுள்ளது.  சசிகலாவுடன் இளவரசியும் தங்கி உள்ளார் எனவும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் வீட்டு உணவு வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை சிறை நிர்வாகம் இதுவரை ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு இதுவரை மேலதிக வசதிகள் வழங்கப்படவில்லை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 3 பேருக்கு 4 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரு நகர நீதிமன்றில் கடந்த வாரம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் சரணடைந்த நிலையில், அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே சிறையில் வீட்டு உணவு வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவற்றில் சிலவற்றை வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg