Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி அணியை வீழ்த்தி தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது மும்பை அணி!

In கிாிக்கட்
Updated: 07:38 GMT, Apr 23, 2017 | Published: 07:16 GMT, Apr 23, 2017 |
0 Comments
1253
This post was written by : Surenth

10ஆவது ஐ.பி.எல். தொடரின் 25ஆவது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டது.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில், பட்லர் 28 ஓட்டங்களையும் பொல்லர்ட் 26 ஓட்டங்களையும் பாண்ட்யா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சில், கம்மின்ஸ் மற்றும் மிஸ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

143 என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில், மொரிஸ் 52 ஓட்டங்களையும் ரபாடா 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், மெக்லனஹாம் மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் பாண்ட்யா  விக்கெட்டையும் கைப்பற்றினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg