Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் போட்டி: இறுதிச்சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்திய வீராங்கனைகள்

In விளையாட்டு
Updated: 05:45 GMT, Apr 30, 2017 | Published: 05:06 GMT, Apr 30, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Shailu
Deepika - Joshna

ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றில் இரு இந்தியர்கள் மோதவிருப்பது இதுவே முதல்முறையாகும்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டியில், தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் தீபிகா பலிக்கல் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஹொங்கொங்கின் அன்னே அயுவுனை எதிர்கொண்டார்.

இதில் தீபிகா 11-9, 7-11, 11-7, 11-9 என்ற செட் கணக்கில் அன்னே அயுவுனை அதிர்ச்சித் தோல்வியடைய செய்துள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 11-6, 11-4, 11-8 என்ற நேர் செட்களில் ஹொங்கொங்கின் டாங் விங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg