Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது நியூசிலாந்து

In கிாிக்கட்
Updated: 05:41 GMT, May 28, 2017 | Published: 05:29 GMT, May 28, 2017 |
0 Comments
1419
This post was written by : Surenth

8ஆவது சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லி தலைமை தாங்கும் அதேவேளை, நியூசிலாந்து அணிக்கு கனே வில்லியம்சன் தலைமை தாங்குகிறார்.

இந்திய அணியில் விராட் கோஹ்லி, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, மஹேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங், கேதர் ஜாதவ், ரஹானே, ஹர்திக் பாண்டியா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முஹமட் ஷமி, தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

நியூசிலாந்து அணி சார்பில், கனே வில்லியம்சன், டொம் லாதம், மார்ட்டின் கப்தில், ரோஸ் டெய்லர், லுக் ரோஞ்ச், நீல் புரூம், ஜேம்ஸ் நீஷம், கிரான்ட்ஹோம், கோரி அண்டர்சன், மிட்செல் சான்ட்னெர், ஜீதன் படேல், அடம் மில்னே, மெக்லெனஹான், டிம் சவுதி, டிரென்ட் பொவுல்ட் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg