Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செனகல் கால்பந்து போட்டியின் போது மோதல்: 8 பேர் உயிரிழப்பு

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:11 GMT, Jul 16, 2017 | Published: 05:11 GMT, Jul 16, 2017 |
0 Comments
1391
This post was written by : Anojkiyan

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் கால்பந்து போட்டியின் போது இரசிகர்களின் கலவரத்தால் சுவர் இடிந்து வீழ்ந்ததில், 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) தலைநகர் டாக்கரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போதே இவ் அசாம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நேரத்தில், ஒரு அணியை சேர்ந்த இரசிகர்கள், மற்றொரு அணியை சேர்ந்த இரசிகர்கள் மீது கற்கள் மற்றும் போத்தல்களை வீசி மோதலில் ஈடுபட்டதாகவும், தகவலறிந்து, மைதானத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், இரசிகர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இரசிகர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற முயல்கையில் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதன்போதே இடிபாடுகளில் சிக்கி 8 இரசிகர்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg