Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர்த்துக்கலில் மீண்டும் காட்டுத்தீ

In ஐரோப்பா
Updated: 09:59 GMT, Jul 26, 2017 | Published: 05:44 GMT, Jul 26, 2017 |
0 Comments
1373
icon_com
This post was written by : Elakkiya

போர்த்துக்கலின் சன்ட்ரெம் (Santarem) மாகாணத்தின் மிகச்சிறிய நகரான மகோவுக்கு (Macao) அருகிலும் காஸ்ரலோ பிரான்கோ (Castelo Branco ) மாகாணத்திலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு திடீரென ஏற்பட்ட இந்த காட்டுத்தீயினால் சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 1500 தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த மகோ மேயர், நிலமை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் போர்த்துக்கல்லில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 75 ஆயிரத்து 264 ஹெக்டேயர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg