Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர்: துருக்கி

In உலகம்
Published: 06:00 GMT, Sep 2, 2017 |
0 Comments
1320
icon_com
This post was written by : Risha

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினரை இலக்குவைத்து இனப்படுகொலை நடத்தப்படுவதாக துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்தான்புல்லில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”இந்த பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தின் காரணமாக மியன்மாரை தம் வசமாக்கிக் கொள்ள விரும்புபவர்கள், இந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.

அங்கு படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மாத்திரமின்றி பிற இன மற்றம் மதக் குழுவினரும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், மியன்மாரில் நீடிக்கும் இந்நிலைமை தடுப்பது தொடர்பில் சர்வதேச நிறுவனங்களை தூண்டுவதுடன், பிராந்தியத்தில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் துருக்கி மேற்கொள்ளும்” என்றார்.

மியன்மாரின் வடமேற்கே கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg