Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் நிதியுதவி

In
Published: 09:20 GMT, Sep 9, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Suganthini
fund

தெற்கு ஆசியாவில் அண்மையில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி அளிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்நிலையில், மூன்று இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஸ்கொட்லாந்து அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்த நிதி உதவியானது, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனிதாபிமான நடவடிக்கைக்கான அரசாங்கத்தின் நிதி உதவியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் பெய்த அடை மழையைத் தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்தப் பாரிய அனர்த்தங்களின்போது, சுமார் ஆயிரத்து 200 மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்தங்களின்போது வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன சேதமடைந்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg