Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கபில் தேவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகிறது!

In கிாிக்கட்
Updated: 06:25 GMT, Sep 30, 2017 | Published: 06:24 GMT, Sep 30, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Risha
Kapil_Dev_at_Equation_sports_auction

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகவுள்ளது.

1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொண்டதை மையப்படுத்தியே இப்படத்தின் திரைக்கதை அமையவுள்ளது.

பிரபல பொலிவூட் இயக்குனர் கபீர் கானின் இயக்கத்தில் அடுத்த வருடம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இத்திரைப்படத்தில் பொலிவூட் நடிகர் ரன்வீர் சிங், பிரதான பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவின் இளமைகாலம் முதல் இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட காலம்வரை, அவரது வாழ்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த திரைப்படம் அமையவுள்ளது.

கபில் தேவ் போன்ற ஒரு ஜாம்பவானின் வாழ்க்கை சரித்தித்தை படமாக்கக் கிடைத்துள்ள வாய்பை பாக்கியமாக கருதுவதாக இயக்குனர் கபீர் கான தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்காரின் வாழ்க்கை வரலாறும் திரைபடமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg