Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாவில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மீண்டும் தேர்தல்

In உலகம்
Published: 04:21 GMT, Oct 26, 2017 |
0 Comments
1142
This post was written by : Risha

கென்ய ஜனாதிபதி தேர்தல் பிரதான எதிர்க்கட்சியினால் புறக்கணிக்கப்பட்டதை அடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சர்ச்சைக்குரிய கென்ய ஜனாதிபதி தேர்தல இன்று (வியாழக்கிழமை) மீண்டும் நடைபெறுகிறது.

வாக்காளர்கள் மற்றும் வாக்கு நிலையங்களின் பாதுகாப்பு நிமித்தம் பல்லாயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுவரும் கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா, தனக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அமைதியான முறையில் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தேர்தலை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா, தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கென்யாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதனையடுத்து, தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி தேர்தலில் தோல்விகண்ட எதிர்க்கட்சி தலைவர் ரைலா ஒடின்கா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அரசியலமைப்பை தேர்தல்கள் ஆணையகம் பின்பற்றவில்லை எனக் கூறி, 60 நாட்களுக்குள் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

அதற்கமைய இன்று இரண்டாவது முறையாக தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg