Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விறுவிறுப்பான போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

In கிாிக்கட்
Updated: 05:11 GMT, Oct 30, 2017 | Published: 05:11 GMT, Oct 30, 2017 |
0 Comments
1497
This post was written by : Risha
india-kanpur-new-zealand-3rd-odi-at_664efe8c-bcc9-11e7-970b-e502f534a12e

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே கான்பூரில் நடைபெற்ற பரபரப்பு மிக்க இறுதி போட்டியில் இந்திய அணி ஆறு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

புனேயில் நடைபெற்ற 2ஆவது போட்டியின்போது ஆடுகள பராமரிப்பாளர் மோசடியில் ஈடுபட்டதையடுத்து பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்றைய இறுதி போட்டி இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 338 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி ஆறு ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்றது. தொடரின் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியின் வெற்றியின் மூலம் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய விருதுகளை இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg