Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன விஜயத்தில், ட்ரம்பிற்கு ட்வீட்டர் கை கொடுக்குமா?

In
Updated: 11:09 GMT, Nov 8, 2017 | Published: 10:37 GMT, Nov 8, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : elayathambi
290716twitter

ஆசிய நாடுகளுக்கான பன்னிரெண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம், தனது துணைவியாருடன் இன்று சீனா சென்றுள்ளார். சீனத் தலை நகர்  பீஜிங்க் சென்றுள்ள டொனால்ட் டரம், சீனாவின் சமூக வலைத் தளங்களின் மீதான தணிக்கையின் மீது மூக்கை நுழைக்கப் போகிறார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

அவர் எப்போதும் கையாளும்   முக்கிய சமூக வலைத் தளமான ட்வீட்டர், சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் உலகிற்குமான ட்ரம்பின் செய்திகள் முதலில் அவரின் ட்விட்டர் பக்கத்தின் ஊடாகவே வெளிவரும். இன் நிலையில் இரு இரவுகள் சீனாவில் தங்கவிருக்கும் டொனால்ட்  ட்ரம்பினால், ட்விட்டரில் செய்திகளை எப்படி பதிவிட முடியும் என்ற  கேள்வி எழுந்துள்ளது.

42 மில்லியன் பயனாளர்களால் தொடரப்படும் ட்ரம்பின் ட்விட்டர் பக்கம், அவர் சீனாவில் இருக்கும் காலத்தில் பதிவேற்றப்படாது இருக்குமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்பின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர்,  அதிபர் ட்ரம் வழமைபோலவே தனது ட்விட்டரை சீனாவிலும் பயன்படுத்துவார் என்று கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டுமுதல் சீனா ட்விட்டரை தடை செய்துள்ளது. 2012 ஆம் ஆண்டு பதவி ஏற்ற சீன அதிபர் ஸீ ஜின்பிங் , சர்வதேச  சமூக வலைத் தளங்களின் மீதான தணிக்கையை மேலும் வலுப்படுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு சர்வதேசத்தில் மிக  மோசமான முறையில் இணைய சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நாடாக சீனா அறிவிக்கப்பட்டிருந்தது. ட்விட்டர், முக நூல், யு ரியூப் மற்றும் இன்ஸ்ரகிராம் போன்ற முன்ணணி சமூக வலைத் தளங்கள் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் தணிக்கைக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.

இன் நிலையில் டொனால்ட் டர்ம் தனது சீன விஜயத்தின்போது,  இத் தணிக்கைக்கு எப்படி முகம் கொடுப்பார் என்பதை அறிவதில், ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டடுகின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg