Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானில் முற்றுகை: சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 30 பேர் விடுதலை

In உலகம்
Updated: 12:03 GMT, Nov 19, 2017 | Published: 12:03 GMT, Nov 19, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Suganthini
afgan

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் படையினரால் முன்னெடுக்கப்பட்ட முற்றுகை நடவடிக்கையின்போது, தலிபான் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்டோரை விடுவித்துள்ளனர்.

ஹெல்மன்ட் மாகாணத்தின் நவாட் மாவட்டத்தில் தலிபானியர்களுக்கு எதிரான முற்றுகை நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்டுப் படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டனர்.

இதன்போது, 12 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள், 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை விடுவித்துள்ளதாக, ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் அரசாங்கத்துக்கும் உதவிய குற்றச்சாட்டின் பேரில், தலிபானியரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg