Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடவுள் ஒரு கதைவை மூடினால் மறு கதவைத் திறப்பார்: பன்னீர்ச்செல்வம்!

In இந்தியா
Published: 11:23 GMT, Nov 20, 2017 |
0 Comments
1504
icon_com
This post was written by : Kemasiya
panner

கடவுள் ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவை திறப்பார் என்பார்கள். அதைப் போன்றே மாற்றுத்திறனாளிகளின் அங்கத்தில் குறைகளை ஏற்படுத்தி, ஒரு கதவை மூடிம் இறைவன், அவர்களுக்கு கூடுதலான அறிவையும், மனவலிமையையும், செயற்திறனையும் கொடுத்து, இன்னொரு கதவை திறக்கிறார் என, துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் ஒரே மேடையில் இடம்பெற்ற, 61 மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“மூடிய கதவை பற்றி கவலை கொள்ளாமல், திறந்த கதவின் மூலம் உலகிற்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். கல்வியிலும், தொழில் வாய்ப்புக்களிலும் சிறந்து விளங்க வேண்டும்.” என, அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் பாண்டியராஜன் தெரிவிக்கையில்,

வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கான இடத்தை 3 இல் இருந்து 4 சதவீதத்திற்கு அரசு ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

அதே போன்று மாற்று திறனாளிகளின் துறைக்கு, 446 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளதாக, சமூக நலன்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg