Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு முரணாக அதிபர் நியமனம்!

In இலங்கை
Updated: 10:32 GMT, Jan 2, 2018 | Published: 10:32 GMT, Jan 2, 2018 |
0 Comments
1091
This post was written by : Risha

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு முரணான வகையில், கிழக்கு மாகாண பாடசாலையொன்றுக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளருக்கு முறையிடப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்விக்கான மன்றத்தின் சம்மாந்துறைக்கிளை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் எம்.எம்.அஹமட் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான அதிபரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு முரணானதாக இடம்பெற்றுள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறித்த அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, மாகாண கணக்காய்வு அதிகாரிகளினால் விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட ஒரு அரசாங்க உத்தியோகத்தருக்கு முறைசார் விசாரணைக்காக தாபனக்கோவை ஏற்பாடுகளுக்கமைய குற்றப்பத்திரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவ்வதிபருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படாமல் குற்றம் மறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி அதிபருக்கெதிரான விசாரணை அடிப்படையில் அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்து சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.கே.எம்.றிஸ்வி என்பவர் கல்முனை மேல் நீதிமன்றத்தில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு, வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கெதிராக வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg