Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியின் வேலையின்மை வீழ்ச்சி

In ஐரோப்பா
Updated: 09:10 GMT, Jan 4, 2018 | Published: 09:10 GMT, Jan 4, 2018 |
0 Comments
1111
This post was written by : Risha

ஜேர்மனியில் மொத்த வேலையின்மையானது கடந்த டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வீழ்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் அலுவலகத்தினால் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொய்டர்ஸ் கருத்துக் கணிப்பில் வேலையின்மை 12 ஆயிரமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இத்தரவுகளின்படி வேலையின்மையானது 29 ஆயிரமாக குறைந்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட தொகையின் இரு மடங்காகும்.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் அலுவலகத்தின் தலைவர் கூறுகையில், வேலையின்மை எண்ணிக்கையானது நான்காவது வருடமாகவும் இம்முறை வீழ்ச்சியடைந்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் சாதகத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தொழிற்படை மீதான கேள்வி அதிகரித்துள்ளது.

மத்திய தொழிலாளர் அலுவலகத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை 23 லட்சத்து 85 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டது. இது கடந்த டிசம்பர் 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் அதிகமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg