Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊவா முதலமைச்சர் பிணையில் விடுதலை! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 07:05 GMT, Jan 23, 2018 | Published: 07:05 GMT, Jan 23, 2018 |
0 Comments
1374
This post was written by : Puvanes

பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருமாறு நிர்ப்பந்தித்தமை தொடர்பில், குறித்த அதிபரால் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்பின்னர் இன்று காலை சட்டத்தரணி சகிதம் பதுளை பொலிஸில் சரணடைந்த ஊவா முதல்வர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, ஊவா மாகாணத்திற்கு சாமர சம்பத் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.

ஊவா முதலமைச்சர் பொலிஸில் சரண்!

அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த  பதுளையிலுள்ள தமிழ் பாடசாலையொன்றின் அதிபரை மண்டியிட வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பதுளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக குறித்த அதிபர் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து சாமர சம்பத் இன்று (செவ்வாய்க்கிழமை) பதுளை பொலிஸ் நிலையத்தில் தனது சட்டத்தரணி சகிதம் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பதுளை தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மண்டியிட்டு மண்ணிப்பு கோர வைத்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத்தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் காரணமாக மௌனமாக இருந்த குறித்த அதிபர் அண்மையில் தனக்கு ஏற்பட்ட அநீதியை பகிரங்கப்படுத்தியதோடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்திருந்தார். அதன் பிரகாரம் ஊவா மாகாண முதலமைச்சர்  இன்று பொலிஸில் சரணடைந்தார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg