Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ஜுன் அலோசியஸின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

In இலங்கை
Updated: 06:42 GMT, Mar 2, 2018 | Published: 06:42 GMT, Mar 2, 2018 |
0 Comments
1097
This post was written by : Vithushagan

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பேச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி செய்த முறைப்பாடு தொடர்பாக கடந்த நான்காம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg