Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய வீரர்களின் பெருந்தன்மை! – இறுதிப் போட்டியில் நடந்தது என்ன?

In கிாிக்கட்
Updated: 10:27 GMT, Mar 21, 2018 | Published: 10:19 GMT, Mar 21, 2018 |
0 Comments
2734
This post was written by : Puvanes

இலங்கையில் நடந்த சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் நான் நினைக்காதது நடந்து விட்டது. கிடைத்தது ஒரு வாய்ப்பு அதனை நான் தவறவிட்டு விட்டேன் என இந்திய அணி வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடவில்லை. இதன் காரணமாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததோடு, அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் தன்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நான் ஆட்டமிழந்த பந்தில் ஆறு ஓட்டங்களை அடிப்பதற்கே முயற்சி செய்தேன் எனினும் அது பிழைத்துவிட்டது. அந்த பந்தில் 6 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் நிலைமை மாறியிருக்கும் என விஜய் கூறியுள்ளார்.

ஆனால் இந்தப் போட்டி எனக்கு நிறைய அனுபவத்தினை தந்துள்ளது இக்கட்டான போட்டியில் எவ்வாறு ஆட வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். இதில் இருந்து நான் மீண்டு வருவேன் சிறப்பான ஆட்டத்தினை ஆடுவேன் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அன்றைய தினம் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் நான் உடைமாற்றும் அறைக்கு சென்ற போது ஏனைய வீரர்கள் எவரும் என்னிடம் கோபமாக நடந்து கொள்ளவில்லை. அனைவருக்கும் இது போன்ற நிலை வரும் என்று ஆறுதல் கூறி என்னை ஊக்குவித்தார்கள் அவர்கள் அனைவரும் நன்றிகள் எனவும் விஜய் சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg