Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெனீவாவில் களமிறக்கப்பட்டவர்களால் தமிழர்களுக்கு ஆபத்து!

In இலங்கை
Updated: 03:08 GMT, Mar 22, 2018 | Published: 03:08 GMT, Mar 22, 2018 |
0 Comments
1375
This post was written by : Varshini

இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு எதிராகவும் ஜெனீவாவில் பரப்புரைகளை மேற்கொண்டு வருபவர்களால் தமிழர்களுக்கு ஆபத்தென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவிலிருந்து எமது ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போர்க்குற்ற நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் நீதி கோரி போராடி வருகின்ற நிலையில், போர்க்குற்றம் இடம்பெறவில்லையென்றும் புலிகளே போர்க்குற்றம் புரிந்ததாகவும் அங்கு களமிறக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

வழமைக்கு மாறாக இம்முறை 60இற்கும் மேற்பட்ட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐ.நா. பக்க அமர்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சிறிதரன், ஒழுங்கமைக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான முறையில் அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார். இவ்விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றாக திரண்டு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டுமென்றும், எனினும் அவ்வாறான ஒரு நிலை இருக்கவில்லையென்றும் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டார்.

இவ்வாறான நிலையில், அனைவரும் இணைந்து இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதன் வாயிலாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஐ.நா. அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவசர அவசரமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தமையானது வெறும் கண்துடைப்பு என்றும் சிறிதரன் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg