Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனிப்பாலங்களை உடைக்கும் கண்கவர் காட்சி

In
Updated: 11:51 GMT, Apr 11, 2018 | Published: 11:51 GMT, Apr 11, 2018 |
0 Comments
1054
This post was written by : Varshini

வடகிழக்கு சீனாவின் Heilongjiang ஆற்றை மூடிப்படர்ந்திருக்கும் பனிப்பாலங்களை கடந்த வார இறுதியில், வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சீன அதிகாரிகள் உடைத்துள்ளனர். குறித்த காட்சிகள் கண்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளன.

இந்த வெடிப்புச் சம்பவமானது நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் என்பதால், அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு சில வேளைகளில் ஆபத்தையும் ஏற்படுத்தலாம். எனவே, அது குறித்த எச்சரிக்கைகள் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில், சீரான இடைவெளிகளில் பனிப்பாலங்கள் தோண்டப்பட்டு, அதற்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் வெடிக்க வைக்கப்பட்டன.

இதன்போது, ஆற்றின் அடியில் இருந்து மேல் எழும் நீர்த்தாரை, பூங்காக்களில் அழகுக்காக உருவாக்கப்படும் நீர்த்தாரைகளைப் போல தோற்றமளிக்கின்றன. ஏறக்குறைய 5 கிலோமீற்றர் நீளமான ஆற்றுப்பகுதியில், இவ்வாறு வெடிபொருட்கள் மூலம் பனிப்பாலங்கள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

அமுர் ஆறு எனவும் அழைக்கப்படும் குறித்த ஆறு சீன – ரஷ்ய எல்லையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg