Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிட்னியை வலம்வரும் பிரான்ஸ் ஜனாதிபதி

In
Updated: 07:17 GMT, May 3, 2018 | Published: 07:17 GMT, May 3, 2018 |
0 Comments
1053
This post was written by : Johnson paiva

அவுஸ்ரேலிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் அவுஸ்ரேலிய ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் சந்திப்பின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) சிட்னியில் நடைபெற்ற உள்நாட்டுக்கலை கண்காட்சியையும் மற்றும் நடன நிகழ்ச்சியொன்றினையும் அவுஸ்ரேலியப் பிரதமர் Malcolm Turnbull அவர்களுடன் இணைந்து கண்டுகளித்தார்.

இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அவுஸ்ரேலிய விஜயத்தின் இறுதிநாளான இன்று இந்நிகழ்வானது கடைசி அங்கமாகக் கொள்ளப்படுகிறது. இதனை நிறைவுசெய்த பின்னர் அவர் மீண்டும் நியூ கலிடோனியாவிற்குப் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்ரேலிய விஜயமானது பிரான்ஸ் நாட்டின் பல நலன்களைப் பெற்றுக்கொள்ளும் பசுபிக் நாடுகளுக்கு ஒருவிதமான அழுத்தத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg