Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரிபுரா சுதேச மக்கள் முன்னணியினர் வீதி மறியல் போராட்டம்

In இந்தியா
Updated: 12:05 GMT, Jul 10, 2017 | Published: 12:05 GMT, Jul 10, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Kemasiya
201707101636431656_inpt-blocks-national-highway-and-railway-tracks-demanding_SECVPF

திரிபுரா சுதேச மக்கள் முன்னணியினர் கடந்த பல மாதங்களாக தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கம்திங்பரி பகுதியில் இருக்கும் அசாம் அகர்தாலா தேசிய நெடுஞ்சாலையில் திரிபுரா சுதேச மக்கள் முன்னணி தலைவர்களும், ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு வீதியில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப் பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாது தடை ஏற்பட்டு மிக நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் அந்த பகுதியின் அருகிலுள்ள ரெயில்வே தண்டவாளங்களிலும் போராட்டக்காரர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டமையினால் அந்தப் பகுதியில் புகையிரத போக்குவரத்தும் தடைப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், நெடுஞ்சாலையில் நிலவிய போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலையில் தேங்கி நின்ற வாகனங்கள் அகர்தலா, டெலியமுரா பகுதிகள் வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.

மறியல் போராட்டம் நடந்த நெடுஞ்சாலையில், போக்குவரத்து நிலமைகள் தற்பொழுது சீரடைந்து வருவதாக மேற்கு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg