கோஹ்லியின் சதம் வீணானது! -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 3 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தி தீவுகள் அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இப்போட்டி புனே, மஹராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயற் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷை ஹோப் 95 ஓட்டங்களையும், அஷ்லி 40 ஓட்டங்களையும், சிம்ரொன் ஹெட்மயர் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதொடு, புவனேஸ்குமார், கலீல் அஹமட் மற்றம் சாகல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 284 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அந்தவகையில் இந்திய அணி 43 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி சார்பில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 107 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன் தவான் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் மார்லன் ஷமுல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஜஷன் கோல்டர், ஒபெட் மக்கோய் மற்றும் அஷ்லி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அத்துடன் கெமர் ரோஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அஷ்லி தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.