இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்
In இலங்கை January 27, 2021 3:09 am GMT 0 Comments 1707 by : Dhackshala

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் இனத்தைச் சேர்ந்த B.1.258 என்ற புது வகை வைரஸை ஒத்த வைரஸே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது குறித்த நாடுகளில் தற்போது பரவி வரும் புதிய வைரஸ் வகையைச் சேர்ந்ததல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸின் தொற்று வீதம் அதிகமாக காணப்படுவதுடன், தற்போது அதிகளவில் பேசப்படும் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் பரவும் வைரஸ் வகையைவிட வேறுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.