Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மையில், 150 வீடுகளையும் லைக்கா நிறுவனம், தமது ‘ஞானம் அறக்கட்டளை’ யின் சார்பில் தான் கட்டியுள்ளது! தொல். திருமாவளவன்:-

In இலங்கை
Published: 08:45 GMT, Mar 29, 2017 |
0 Comments
1264
icon_com
This post was written by : Kuruparan

லைக்காவின் 150 வீடுகள் குறித்த தகவல்கள்: விடுதலைச்சிறுத்தைகளின் விளக்கம்

ஈழமண்ணில் தமது வாழ்வாதாரங்கள் யாவற்றையும் இழந்து வறுமையில் வீழ்ந்து இன்னலில் உழலும் எளியோருக்கு, ‘ லைக்கா ‘ என்னும் நிறுவனம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டியுள்ள வீடுகளை, அம்மக்களிடம் ஒப்படைக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அந்நிறுவனம் செய்துவருகிறது. அந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார் என்கிற தகவல் அண்மையில் வெளியானது.

அதனையொட்டி, ஈழத்தில் தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தோழர்கள் சிலர், இது தொடர்பான தமது அச்சத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டனர். அதாவது, திரு. ரஜினிகாந்த் அவர்கள், தற்போதைய சூழலில், இந்நிகழ்வில் பங்கேற்பது, தொடரும் எமது போராட்டங்களையும் குமுறும் எமது உணர்வுகளையும் நீர்த்துப் போகச் செய்யுமென்றும் இங்குள்ள சூழலை திசை திருப்பிவிடுமென்றும் அச்சப்பட்டனர். அத்துடன், திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டால் நலம் பயக்குமென்றும் கூறினர். இதனடிப்படையில் தான், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.

தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, திரு. ரஜினிகாந்த் அவர்கள் உடனடியாக அப்பயணத்தைக் கை விடுவதாக அறிவித்தார். அது அவருடைய முதிர்ச்சியான அணுகுமுறைக்குச் சான்றாக அமைந்தது.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் குறித்து யாம் கூறிய கருத்துக்களில் உள்ள தவறான தகவல்கள் குறித்து, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஒரு சில தோழர்கள் எமக்குச் சுட்டிக்காட்டினர். அதாவது, மொத்தம் 150 வீடுகளில், 50 வீடுகள் மட்டுமே லைக்கா நிறுவனம் கட்டியுள்ளதென்று யாம் கூறியது பிழையானது என்றும், 150வீடுகளையும் லைக்காவே கட்டியுள்ளது என்றும் கூறினர். அத்துடன், இந்த தவறான தகவல் உலகம் முழுவதும் பரவுவது சரியா என்றும் கேள்வி எழுப்பினர். இது வேதனைக்குரியதே ஆகும்!

எமக்கு ஈழத்து உறவுகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தான் அவ்வாறு கூறினோமே தவிர, இதில் எமக்கு வேறு எந்த உள்நோக்கமுமில்லை. உண்மையில், 150 வீடுகளையும் லைக்கா நிறுவனம், தமது ‘ ஞானம் அறக்கட்டளை ‘ யின் சார்பில் தான் கட்டியுள்ளது என்கிற போது, அதுதான் உண்மையென்னும்போது, பிழையான தகவலை வெளிப்படுத்தியதற்காக வருந்துகிறோம்!

சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராகக் களத்தினில் நின்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் எமது ஈழத்துச் சொந்தங்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது ஒன்றே எமது தூய்மையான நோக்கமாகும் . இதில், ரஜினியை எதிர்ப்பதோ, லைக்காவை எதிர்ப்பதோ எமக்கு முதன்மையானதில்லை.

இவண்:
தொல். திருமாவளவன்
தலைவர், விசிக.

thirumavalavan_Letter_01

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg